பொருந்தும் அனைத்துச் சட்டங்களுக்கும் இணங்குவதற்கு நீங்கள் பொறுப்பாவீர்கள், இதில் கலிபோர்னியா முன்மொழிவு 65-இல் (பிராப் 65) அவசியமெனக் குறிக்கப்பட்டுள்ள எச்சரிக்கைத் தேவைகளும் அடங்கும். தற்போதுள்ள மற்றும் புதிய புராடக்ட் லிஸ்டிங்குகளுக்கு, நீங்கள் கண்டிப்பாகச் செய்யவேண்டியவை:
-
புராடக்ட்டுக்கு பிராப் 65 எச்சரிக்கை தேவைப்படுமா என்பதைத் தீர்மானிக்கவும்.
-
இந்தப் பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி சரியான பிராப் 65 எச்சரிக்கையை Amazon க்கு வழங்கவும் (மின்னஞ்சல் மூலம் போன்ற வேறு எந்த வகையிலும் அல்ல).
-
உங்கள் புராடக்ட்டுக்கு ஒரு தனிப்பயனாக்கப்பட்ட பிராப் 65 எச்சரிக்கையை வழங்கவேண்டும் என நீதிமன்றம் உரைத்தால், செல்லிங் பார்ட்னர் சப்போர்ட் ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
-
நீங்கள் பட்டியலிடும் புராடக்ட்டின் உற்பத்தியாளர் இல்லையென்றால் அல்லது புராடக்ட்டை விற்ற அல்லது பரிமாற்றிய வேறொருவரிடமிருந்தும் புராடக்ட் உற்பத்தியாளரிடமிருந்து நீங்கள் பெற்ற 65 எச்சரிக்கையை எங்களுக்கு வழங்கவும்.
-
லேபிள்கள், லேபிளிடல், ஷெல்ப் அடையாளக் குறிகள், அல்லது குறிச்சொற்கள் போன்ற உங்கள் புராடக்ட்டைக் காட்சிப்படுத்த உதவும் எந்தவொரு எச்சரிக்கைப் பொருட்களையும் நீங்கள் கேட்காதவரை எங்களுக்கு வழங்காதீர்கள்.
-
குழந்தை SKUகளுக்குப் பொருந்தக்கூடிய ஏதேனும் பிராப் 65 எச்சரிக்கைகள் இருப்பின் அதை வழங்கவும். நீங்கள் ஒரு பேரண்ட் SKU க்கு பிராப் 65 எச்சரிக்கையை வழங்கினால், நீங்கள் ஒரு பிழை மெசேஜைப் பெறுவீர்கள் மற்றும் சமர்ப்பிப்பு தோல்வியடையும்.
குறிப்பு: சில லிஸ்டிங்குகளைப் புதுப்பிக்கும்படி Amazon புராடக்ட் இணக்கத்திலிருந்து இமெயிலைப் பெற்றிருந்தால், இமெயிலில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் லிஸ்ட்டுகளுக்கு எச்சரிக்கை தேவையில்லை என்றால், நடவடிக்கை ஏதும் எடுக்கத் தேவையில்லை.
குறிப்பு: உங்களுக்கு 10 ஊழியர்களுக்கும் குறைவாகவும், வேறு யாராவது அதே புராடக்ட்டை விற்பனை செய்தாலும் கூட, Amazon ஸ்டோரில் நீங்கள் விற்கும் புராடக்ட்டுகளுக்கு 65 எச்சரிக்கையைச் சேர்ப்பதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.
பிராப் 65 பற்றிய மேலும் தகவல்
அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பான குடிநீர் மற்றும் நச்சு அமலாக்க சட்டம் 1986 என அழைக்கப்படும் முன்மொழிவு 65, இரசாயனங்களுக்கு வெளிப்படும்போது அவை புற்றுநோயை அல்லது இனப்பெருக்க நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் தன்மை கொண்டது எனக் கலிஃபோர்னியாவால் அடையாளம் காணப்பட்ட இரசாயனங்கள் குறித்து கலிபோர்னிய நுகர்வோர்களுக்கு எச்சரிக்கைகளை வழங்குவது குறித்த கலிபோர்னியா சட்டம் ஆகும். தாங்கள் பயன்படுத்தும் புராடக்ட்டுகளிலிருந்து இந்த இரசாயனங்களின் வெளிப்படுத்தலுக்கு ஆளாவது குறித்து தகவலறிந்த முடிவுகளை கலிபோர்னிய நுகர்வோர் எடுக்க உதவும் நோக்கத்த்துடன் இந்த எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. முன்மொழிவு-65 புரோகிராமை சுற்றுச்சூழல் சுகாதார அபாய மதிப்பீடு கலிபோர்னியா அலுவலகம் (OEHHA) நிர்வகிக்கிறது மற்றும் 850 க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் அடங்கிய அத்தகைய இரசாயனங்களின் லிஸ்ட்டை வெளியிடுகிறது. ஆகஸ்ட் 2016 இல், OEHHA ஏற்றுக்கொண்ட புதிய ஒழுங்குமுறைகள் ஆகஸ்ட் 30, 2018 முதல் அமலுக்கு வந்தன. இது முன்மொழிவு 65 எச்சரிக்கைகளில் கொடுக்கப்படும் தகவலில் தேவையான மாற்றத்தில் குறிக்கின்றன.
உங்கள் புதிய மற்றும் தற்போதுள்ள புராடக்ட்டுகளுக்கு பிராப் 65 எச்சரிக்கைகளை எப்படி வழங்குவது
Seller Central இல் ஒற்றை அல்லது பல லிஸ்டிங்குகளை உருவாக்கும்போது பிராப் 65 எச்சரிக்கைகளை வழங்க கீழேயுள்ள முறைகளைப் பயன்படுத்தவும்.
Seller Central இல் ஓர் ஒற்றை லிஸ்டிங்கை உருவாக்கும்போது:
-
இன்வெண்ட்ரி பகுதிக்குச் சென்று புராடக்ட்டைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
-
ஒரு புதிய புராடக்ட் லிஸ்டிங்கை உருவாக்கு என்பதை கிளிக் செய்யவும்.
-
இணக்கம் தாவலுக்குச் சென்று, பொருத்தமான கலிபோர்னியா முன்மொழிவு 65 எச்சரிக்கை வகை மற்றும் தேவைப்பட்டால், தொடர்புடைய கலிபோர்னியா முன்மொழிவு 65 இரசாயன பெயரைத்(பெயர்களைத்) தேர்ந்தெடுக்கவும். கீழே உள்ள அட்டவணையில் எச்சரிக்கை வகைகள் மற்றும் அவற்றின் விளக்கத்தையும் பார்க்கவும்.
Seller Central இல் பல லிஸ்டிங்குகளை உருவாக்குதல்
-
இன்வெண்ட்ரி பகுதிக்குச் சென்று, பின்னர் அப்லோடு மூலம் புராடக்ட்டுகளைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
-
பொருந்தும் புராடக்ட் வகைப்படுத்தல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு மேம்பட்ட டெம்ப்ளேட்டை ஜெனரேட் செய்யவும்.
-
டெம்ப்ளேட்டில், இணக்கம் குழுவின் கீழ் கலிபோர்னியா முன்மொழிவு 65 அட்ரிபியூட்டுகளைக் காண்பீர்கள். பொருத்தமான கலிபோர்னியா முன்மொழிவு 65 எச்சரிக்கை வகையைத் தேர்ந்தெடுத்து, பொருந்தினால், தொடர்புடைய கலிபோர்னியா முன்மொழிவு 65 இரசாயனப் பெயரைத்(பெயர்களைத்) தேர்ந்தெடுக்கவும்.
முக்கியம்: உங்கள் லிஸ்டிங்குகளை உருவாக்க தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டங்களைப் பயன்படுத்தினால், நீங்கள் அந்த லிஸ்டிங்குகளில் பிராப் 65 எச்சரிக்கைத் தகவலைச் சேர்க்க மேலே உள்ள முறையைப் பயன்படுத்த வேண்டும்.
கலிபோர்னியா முன்மொழிவு 65 எச்சரிக்கை வகைகள்
கலிபோர்னியா முன்மொழிவு 65 எச்சரிக்கை வகை |
புராடக்ட்டில் காட்டப்படும் எச்சரிக்கை |
உணவு |
எச்சரிக்கை இந்தப் புராடக்ட்டை உட்கொள்வது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை உருவாக்கும் என கலிபோர்னிய மாநிலம் அறியும் [ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரசாயனங்களின் பெயர்] மற்றும் பிறப்புக் குறைபாடுகள் அல்லது பிற இனப்பெருக்கம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பை உருவாக்கும் என கலிபோர்னிய மாநிலம் அறியும் [ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரசாயனங்களின் பெயர்], இரசாயனங்களுக்கு உங்களை வெளிப்படுத்தக்கூடும். மேலும் தகவலுக்கு, www.P65Warnings.ca.gov/food என்ற தளத்திற்குச் செல்லவும்.
|
ஃபர்னிச்சர்கள் |
எச்சரிக்கை புற்றுநோய், பிறப்புக் குறைபாடு அல்லது இனப்பெடுக்கச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என கலிபோர்னிய மாநிலம் அறியும் [புற்றுநோயை ஏற்படுத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரசாயனங்களின் பெயர், இனப்பெருக்க நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரசாயனங்களின் பெயர் அல்லது புற்றுநோய் மற்றும் பிறப்பு குறைபாடுகள் இரண்டையும் அல்லது பிற இனப்பெருக்கச் சிக்கல்களை ஏற்படுத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரசாயனங்களின் பெயர் ], இரசாயனங்களுக்கு உங்களை இப்புராடக்ட் வெளிப்படுத்தக் கூடும். மேலும் தகவலுக்கு www.P65Warnings.ca.gov/furniture என்ற தளத்திற்குச் செல்லவும்.
|
இரசாயனம் |
புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்ட இரசாயனங்களுக்கு வெளிப்படுவது சார்ந்து்,
எச்சரிக்கை இதற்கு வெளிப்படும்போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு எனக் கலிபோர்னிய மாநிலம் அறியும் [ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரசாயனங்கள் பெயர்], இரசாயனங்கள் இந்தப் புராடக்ட்டில் உள்ளன. மேலும் தகவலுக்கு, www. P65Warnings. ca. gov/ என்ற தளத்திற்குச் செல்லவும்.
இனப்பெருக்க நச்சுத்தன்மைஏற்படுத்தும் வாய்ப்பு கொண்ட இரசாயனங்களுக்கு வெளிப்படுவது சார்ந்து:
எச்சரிக்கை இதற்கு வெளிப்படும்போது பிறப்புக் குறைபாடுகள் அல்லது பிற இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என கலிபோர்னிய மாநிலம் அறியும் [ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரசாயனங்கள் பெயர்], இரசாயனங்கள் இந்தப் புராடக்ட்டில் உள்ளன. மேலும் தகவலுக்கு, www. P65Warnings. ca. gov/ என்ற தளத்திற்குச் செல்லவும்.
பிறப்புக் கோளாறுகள் அல்லது பிற இனப்பெருக்க நச்சுத்தன்மை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்ட இரசாயனங்களுக்கு வெளிப்படுவது சார்ந்து
எச்சரிக்கை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு என கலிபோர்னிய மாநிலம் அறியும் [ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரசாயனங்கள் பெயர்] மற்றும் பிறப்புக் குறைபாடு அல்லது பிற இனப்பெருக்கம் சாந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என கலிபோர்னிய மாநிலம் அறியும் [ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரசாயனங்கள் பெயர்] இரசாயனங்களுக்கு இப்புராடக்ட் உங்களை வெளிப்படுத்தக் கூடும். மேலும் தகவலுக்கு, www. P65Warnings. ca. gov/ என்ற தளத்திற்குச் செல்லவும்.
புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க நச்சுத்தன்மை இரண்டையும் ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்ட இரசாயனங்களுக்கு வெளிப்படுவது சார்ந்து:
எச்சரிக்கை பிறப்புக் குறைபாடுகள் அல்லது பிற இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என கலிபோர்னிய மாநிலம் அறியும் [ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரசாயனங்கள் பெயர்], இரசாயனங்களுக்கு இப்புராடக்ட் உங்களை வெளிப்படுத்தக் கூடும். மேலும் தகவலுக்கு, www. P65Warnings. ca. gov/ என்ற தளத்திற்குச் செல்லவும்.
|
பின்வரும் புராடக்ட் எச்சரிக்கைகளில் ஏதேனும் ஒன்று உங்கள் புராடக்ட் அல்லது அதன் கண்டெய்னர் அல்லது உறையில் அச்சிடப்பட்ட அல்லது ஒட்டப்பட்டு இருந்தால், நீங்கள் பின்வரும் எச்சரிக்கை வகைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும், மேலும் நீங்கள் இரசாயனப் பெயர் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை:
உங்கள் புராடக்ட் ஆல்கஹால், பதப்படுத்தாத மரம், பயணிகள் அல்லது கடினமான நிலப்பரப்பில் செல்லும் வாகனம், ஒரு பொழுதுபோக்கு வெசல், அல்லது டீசல் எஞ்சின் கொண்டிருந்தால், நீங்கள் தொடர்புடைய எச்சரிக்கை வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும், மேலும் நீங்கள் ஓர் இரசாயனப் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை:
கலிபோர்னியா முன்மொழிவு 65 எச்சரிக்கை வகை |
புராடக்ட்டில் காட்டப்படும் எச்சரிக்கை |
ஆல்கஹால் |
எச்சரிக்கை: டிஸ்டில்ட் ஸ்பிரிட்கள், பியர், கூலர்கள், ஒயின் மற்றும் பிற மது பானங்கள் ஆகியவை புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம், மற்றும், கர்ப்பத்தின்போது பிறப்புக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கலாம். மேலும் தகவலுக்கு www.P65Warnings.ca.gov/alcoholic-beverages என்ற தளத்திற்குச் செல்லவும். |
பதப்படுத்தாத மரம் |
எச்சரிக்கை: மரப் பொருட்களை டிரில்லிங், அறுத்தல், சாண்டிங் அல்லது மெஷினிங் செய்வது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு என கலிபோர்னியா மாநிலம் அறியும் மரத் தூசிக்கு உங்களை வெளிப்படுத்தலாம். மர தூசியை சுவாசத்தின் வழியாக உள்ளிழுப்பதைத் தவிர்க்கவும் அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தூசி முகக்கவசம் அல்லது பிற பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தவும். மேலும் தகவலுக்கு, www. P65Warnings. ca. gov/wood என்ற தளத்திற்குச் செல்லவும். |
பயணி அல்லது ஆஃப்-ரோடு வாகனம் |
எச்சரிக்கை: பயணி வாகனம் அல்லது ஆஃப்-ரோடு வாகனத்தை இயக்குவது, சர்வீஸ் செய்வது மற்றும் பராமரிப்பது போன்றவை புற்றுநோய், பிறப்புக் குறைபாடு அல்லது பிற இனப்பெருக்கம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு எனக் கலிபோர்னியா மாநிலம் அறியும் எஞ்சின் எக்ஸாஸ்ட், கார்பன் மோனாக்சைடு, பித்தலேட்டுகள் மற்றும் ஈயம் உள்ளிட்ட இரசாயனங்களுக்கு உங்களை வெளிப்படுத்தக் கூடும். வெளிப்பாட்டைக் குறைக்க, எக்சாஸ்ட்டைச் சுவாசிப்பதைத் தவிர்க்கவும், தேவையற்று எஞ்சினை ஐடில் செய்யாதீர்கள், வாகனத்தை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைத்து சர்வீஸ் செய்யுங்கள், கையுறைகளை அணியுங்கள் அல்லது உங்கள் வாகனத்திற்கு சர்வீஸ்செய்யும் போது அடிக்கடி கைகளை கழுவுங்கள். மேலும் தகவலுக்கு, www. P65Warnings. ca. gov/passenger-vehicle என்ற தளத்திற்குச் செல்லவும்
|
பொழுதுபோக்கு வெசல் |
எச்சரிக்கை: பொழுதுபோக்கு மெரைன் வெசலை இயக்குவது, சர்வீஸ் செய்வது மற்றும் பராமரிப்பது போன்றவை புற்றுநோய், பிறப்புக் குறைபாடு அல்லது பிற இனப்பெருக்கம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என கலிபோர்னியா மாநிலம் அறியும் எஞ்சின் எக்ஸாஸ்ட், கார்பன் மோனாக்சைடு, பித்தலேட்டுகள் மற்றும் ஈயம் உள்ளிட்ட இரசாயனங்களுக்கு உங்களை வெளிப்படுத்தக் கூடும். வெளிப்பாட்டைக் குறைக்க, எக்சாஸ்டைச் சுவாசிப்பதைத் தவிர்க்கவும், வெசலை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைத்து சர்வீஸ் செய்யுங்கள், கையுறைகளை அணியுங்கள் அல்லது உங்கள் வெசலை சர்வீஸ்செய்யும் போது அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். மேலும் தகவலுக்கு, www.P65Warnings.ca.gov/marine என்ற தளத்திற்குச் செல்லவும்
|
டீசல் எஞ்சின் |
எச்சரிக்கை: டீசல் எஞ்சின் எக்ஸாஸ்ட்டைச் சுவாசிப்பது புற்றுநோய், பிறப்புக் குறைபாடு அல்லது பிற இனப்பெருக்கம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என கலிபோர்னியா மாநிலம் அறியும் இரசாயனங்களுக்கு உங்களை வெளிப்படுத்தக் கூடும்.
-
எப்போதும் காற்றோட்டம் உள்ள பகுதியில் எஞ்சினைத் துவக்கி, இயக்கவும்.
-
ஒரு மூடப்பட்ட பகுதியில் இருந்தால், எக்ஸ்சாஸ்ட் வெளியேறத் தேவையான வசதிகளைச் செய்யவும்.
-
எக்சாஸ்ட் சிஸ்டத்தை மாற்றவோ திருத்தவோ கூடாது.
-
தேவையின்றி எஞ்சினை ஐடில் நிலையில் வைக்க வேண்டாம்.
மேலும் தகவலுக்கு, www.P65Warnings.ca.gov/diesel
|
பிராப் 65 எச்சரிக்கைகள் பற்றிய கூடுதல் தகவல் கீழே உள்ள இணைப்புகளில் கிடைக்கும்: