Amazon க்கு அனுப்புதல்: உங்கள் ஷிப்மெண்ட்டை மாற்றுதல் அல்லது கேன்சல் செய்தல்
Dieser Artikel bezieht sich auf den Verkauf in: அமெரிக்கா

Amazon க்கு அனுப்புதல்: உங்கள் ஷிப்மெண்ட்டை மாற்றுதல் அல்லது கேன்சல் செய்தல்

ஷிப்மெண்ட்டைக் கேன்சல் செய்தல்

பணிப்பாய்வுப் பக்கத்தின் கீழே உள்ள ஷிப்மெண்ட்டைக் கேன்சல் செய் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் Amazon க்கு அனுப்புதல் ஷிப்மெண்ட்டைக் கேன்சல் செய்யலாம். இது நீங்கள் உருவாக்கிய அனைத்து ஷிப்மெண்ட்டுகளையும் கேன்சல் செய்து, அவற்றை உங்கள் ஷிப்பிங் வரிசையில் கேன்சல் செய்யப்பட்டவை என்ற ஸ்டேட்டஸிற்கு மாற்றும்.

Amazon பார்ட்னராக இருக்கும் கேரியர் கட்டணங்களைத் தவிர்த்தல்

சிறிய பார்சல் ஷிப்மெண்ட்டுகளுக்கு, நீங்கள் ஷிப்பிங் தேர்வுகளை உறுதிப்படுத்தி, கட்டணங்களை ஏற்றுக்கொண்ட பிறகு, Amazon பார்ட்னராக இருக்கும் கேரியர் கட்டணங்களைக் கேன்சல் செய்து முழுப் பணத்தையும் ரீஃபண்டு பெற, உங்களுக்கு 24 மணிநேரம் இருக்கிறது. அந்த நேரத்திற்குப் பிறகு, தவிர்த்தல் நீங்கள் உருவாக்கிய அனைத்து ஷிப்மெண்ட்டுகளையும் கேன்சல் செய்யும், ஆனால் ஷிப்பிங் கட்டணங்களை உங்களால் தவிர்க்க முடியாது.

பேலட் ஷிப்மெண்ட்டுகளுக்கு, உங்கள் ஷிப்பிங் தேர்வுகளை உறுதிப்படுத்தி கட்டணங்களை ஏற்றுக்கொண்ட பிறகு, Amazon பார்ட்னராக இருக்கும் கேரியர் கட்டணங்களைக் கேன்சல் செய்து முழுப் பணத்தையும் ரீஃபண்டு பெற, உங்களுக்கு ஒரு மணிநேரம் இருக்கிறது. அந்த நேரத்திற்குப் பிறகு, தவிர்த்தல் நீங்கள் உருவாக்கிய அனைத்து ஷிப்மெண்ட்டுகளையும் கேன்சல் செய்யும், ஆனால் ஷிப்பிங் கட்டணங்களை உங்களால் தவிர்க்க முடியாது.

ஷிப்பிங் தேதியை மாற்றுதல்

உங்கள் ஷிப்மெண்ட்டை உறுதிசெய்த பிறகு நீங்கள் எதிர்பார்க்கப்படும் ஷிப்பிங் தேதி மாறினால், அதைப் பணிப்பாய்வின் படி 3 பாக்ஸ் லேபிள்களைப் பிரிண்ட் செய்யவும் என்பதில், ஷிப்பிங் தேதியை மாற்று என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் புதுப்பிக்கலாம்.

பிக்-அப் தேதியை மாற்றவும்

Amazon பார்ட்னராக இருக்கும் கேரியர் புரோகிராமில் நீங்கள் பதிவுசெய்திருந்தால், செல்லிங் பார்ட்னர் சப்போர்ட்டின் உதவி தேவையில்லாமல், Seller Central இல் குறைந்த டிரக்லோடு (LTL) ஷிப்மெண்ட்டுகளை விரைவில் மீண்டும் திட்டமிடலாம். இந்த அம்சம் செப்டம்பர் 2022 முதல் வெளியிடப்படுகிறது, மேலும் அக்டோபர் 31, 2022க்குள் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: பார்ட்னராக இருக்கும் கேரியர் புரோகிராமில் நீங்கள் என்ரோல் செய்யவில்லை என்றாலோ அல்லது ஃபிரைட்-தயாரான தேதியை மாற்றுவதற்கான விருப்பம் உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றாலோ, உங்கள் பிக்-அப்பை மாற்றியமைக்க, உங்கள் பிக்-அப் நாள் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு முன்னதாக செல்லிங் பார்ட்னர் சப்போர்ட்டைத் தொடர்புகொள்ளவும்.

  1. உங்கள் ஷிப்பிங் வரிசைக்குச் செல்லவும்.
  2. நீங்கள் மறுதிட்டமிட விரும்பும் ஷிப்மெண்ட்டின் ஷிப்மெண்ட் ID ஐக் கண்டறியவும்.
  3. உங்கள் ஷிப்மெண்ட்டின் ஸ்டேட்டஸைக் கண்டறிந்து, பின்வரும் நடவடிக்கைகளில் ஒன்றை எடுக்கவும்:
    • ஸ்டேட்டஸானது ஷிப்பிங் செய்யத் தயார் என இருந்தால், ஷிப்மெண்ட்டை டிராக் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஸ்டேட்டஸானது வேலை செய்கிறது என்றால்:
      1. ஷிப்மெண்ட்டில் வேலை செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
      2. படி 5 இன் கீழ், மதிப்பிடப்பட்ட பிக்-அப் தேதியைக் கண்டறியவும்.
      3. மிகவும் புதுப்பித்த பிக்-அப் அட்டவணைக்கு, ஷிப்பிங் நிகழ்வுகளைப் பார் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஷிப்மெண்ட் சுருக்கவிவரம் என்ற பக்கத்தில், ஷிப்மெண்ட் நிகழ்வுகள் என்ற தாவலைக் கிளிக் செய்யவும்.
  5. ஃபிரெயிட் தயார் தேதியை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. ஒரு புதிய தேதி மற்றும் காரணக் கோடைத் தேர்ந்தெடுத்து, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஷிப்மெண்ட் உருவாக்கத்திற்குப் பிறகு ஷிப்பிங் உள்ளடக்கங்களை மாற்றுதல்

சாதாரண பிஸினஸ் நிகழ்வுகள் காரணமாக, நீங்கள் ஷிப்மெண்ட் உருவாக்கத்திற்குப் பிறகு ஒரு ஷிப்மெண்ட்டிற்கான உள்ளடக்கங்களை மாற்ற வேண்டியிருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஒரு ஷிப்மெண்ட்டை உறுதிப்படுத்திய பிறகு, ஷிப்பிங் விவரங்கள் பாக்ஸில் உள்ள உள்ளடக்கங்களைக் காட்டு அல்லது திருத்து என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அவ்வாறு செய்யலாம்.

உங்கள் ஷிப்மெண்ட்டில் பல பாக்ஸ்கள் இருந்தால், நீங்கள் பாக்ஸில் உள்ளவை பற்றிய தகவலை வழங்க வேண்டாம் எனத் தேர்வுசெய்திருந்தால் அல்லது பாக்ஸில் உள்ளவை பற்றிய தகவலை வழங்க 2D பார்கோடுகளைப் பயன்படுத்தினால் அனைத்து SKUகள் தாவல் மூலம் ஷிப்மெண்ட்டில் உள்ள யூனிட்டுகளின் எண்ணிக்கையை நீங்கள் திருத்தலாம். பாக்ஸில் உள்ளவை பற்றிய தகவலை வழங்கும் மற்ற முறைகளுக்கு, நீங்கள் அனைத்து பாக்ஸ்கள் தாவல் மூலம் யூனிட்டுகளின் எண்ணிக்கையைத் திருத்தலாம்.

முக்கியம்: ஷிப்மெண்ட் ஃபுல்ஃபில்மெண்ட் சென்டருக்கு வருவதற்கு முன், ஷிப்மெண்ட்டில் உள்ள யூனிட்டுகளின் எண்ணிக்கை 5% வரை அல்லது ஒரு ஷிப்மெண்ட்டுக்கு SKU ஒன்றுக்கு 6 யூனிட்டுகள், இவற்றில் எது அதிகமோ அவற்றை நீங்கள் திருத்தலாம். அசல் குவான்டிட்டியானது ஒரு ஷிப்மெண்ட்டுக்கு SKU ஒன்றுக்கு 6 யூனிட்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் வரை ஷிப்மெண்ட்டில் இருந்து ஒரு SKU ஐ நீங்கள் அகற்றலாம். நீங்கள் ஒரு ஷிப்மெண்ட்டில் உள்ள அனைத்து SKUகளையும் அகற்றவோ ஷிப்மெண்ட்டைக் காலியாக்கவோ முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த வரம்புகளுக்கு அப்பாற்பட்ட மாற்றங்களைச் செய்ய விரும்பினால், நீங்கள் ஷிப்மெண்ட்டைக் கேன்சல் செய்து புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும்.

Amazon பார்ட்னராக இருக்கும் கேரியரைப் பயன்படுத்தும் சிறிய பார்சல் ஷிப்மெண்ட்டுகளுக்கு, பாக்ஸ் எடை அல்லது பரிமாணங்களைத் திருத்தம் செய்ய அல்லது பாக்ஸ்களைச் சேர்க்க அல்லது அகற்ற உங்களுக்கு 24 மணிநேரம் உள்ளது. திருத்தங்கள், மதிப்பிடப்பட்ட ஷிப்பிங் ஃபீஸில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் திருத்தங்களைச் சமர்ப்பித்து, உறுதிசெய்த பிறகு, நீங்கள் அனைத்து பாக்ஸ்களுக்கும் பாக்ஸ் லேபிள்களைப் பிரிண்ட் செய்து ஒட்ட வேண்டும்.

Amazon பார்ட்னராக இருக்கும் கேரியரைப் பயன்படுத்தும் பேலட் ஷிப்மெண்ட்டுகளுக்கு, பாக்ஸ் எடை அல்லது பரிமாணங்களைத் திருத்த அல்லது பாக்ஸ்களைச் சேர்க்க அல்லது அகற்ற உங்களுக்கு ஒரு மணிநேரம் உள்ளது. திருத்தங்களை உறுதிப்படுத்தி சமர்ப்பித்த பிறகு, நீங்கள் அனைத்து பேலட் லேபிள்களைப் பிரிண்ட் செய்து ஒட்ட வேண்டும்.

நீங்கள் எப்போது புதுப்பிப்புகளைச் செய்வீர்கள் என்பதைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட பாக்ஸில் இருந்து அனைத்து SKUகளையும் உங்களால் அகற்ற முடியும். பாக்ஸில் உள்ளவை பற்றிய தகவலை வழங்க வெப் ஃபார்ம் அல்லது Excel ஃபைலைப் பயன்படுத்தியிருந்தால், பின்வரும் காலக்கெடுவிற்குள் மாற்றங்களைச் செய்யலாம்:

  • Amazon பார்ட்னராக இருக்கும் கேரியரைப் பயன்படுத்தும் சிறிய பார்சல் ஷிப்மெண்ட்டுகள்: உங்கள் ஷிப்பிங் தேர்வுகளை உறுதிப்படுத்தி, கட்டணங்களை ஏற்றுக்கொண்ட பிறகு 24 மணிநேரத்திற்குள் பாக்ஸில் உள்ள அனைத்து SKUகளையும் அகற்றலாம். அந்த நேரத்திற்குப் பிறகு, நீங்கள் பாக்ஸ்களில் இருந்து SKUகளை அகற்றலாம், ஆனால் நீங்கள் பாக்ஸில் உள்ள அனைத்து SKUகளையும் அகற்றவோ பாக்ஸை காலியாக்கவோ முடியாது.
  • Amazon பார்ட்னராக இருக்கும் கேரியரைப் பயன்படுத்தும் பேலட் ஷிப்மெண்ட்டுகள்: உங்கள் ஷிப்பிங் தேர்வுகளை உறுதிப்படுத்தி, கட்டணங்களை ஏற்றுக்கொண்ட பிறகு ஒரு மணிநேரத்திற்குள் பாக்ஸில் உள்ள அனைத்து SKUகளையும் அகற்றலாம். அந்த நேரத்திற்குப் பிறகு, நீங்கள் பாக்ஸ்களில் இருந்து SKUகளை அகற்றலாம், ஆனால் நீங்கள் பாக்ஸில் உள்ள அனைத்து SKUகளையும் அகற்றவோ பாக்ஸை காலியாக்கவோ முடியாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது ஷிப்மெண்ட்டை நிறைவுசெய்ததற்குப் பிறகு, எனது ஷிப்பிங் அனுப்புநர் முகவரியை நான் மாற்ற முடியுமா?

ஷிப்மெண்ட் இறுதி செய்யப்பட்டவுடன் ஷிப்பிங் அனுப்புநர் முகவரியை மாற்ற முடியாது. உங்கள் ஷிப்மெண்ட்டைக் கேன்சல் செய்து சரியான ஷிப்பிங் அனுப்புநர் முகவரியுடன் நீங்கள் மற்றொன்றை உருவாக்க வேண்டும்.

எனது பணிப்பாய்வில் தனிப்பட்ட ஷிப்மெண்ட்டுகளை நான் கேன்சல் செய்ய முடியுமா?

இல்லை, Amazon க்கு அனுப்புதல் என்பதில் தனிப்பட்ட ஷிப்மெண்ட்டுகளைக் கேன்சல் செய்ய முடியாது.

முடிந்தவரை கஸ்டமர்களுக்கு அருகாமையில் சேமிக்கவும் மற்றும் உங்கள் புராடக்ட்டுகளுக்கான ஆர்டர்களை டெலிவரி செய்யும் நேரத்தைக் குறைக்கவும் வேண்டி Amazon உங்கள் இன்வெண்ட்ரியைப் பல ஃபுல்ஃபில்மெண்ட் சென்டர்களுக்கு அனுப்பக் கூடும். பணிப்பாய்வின் படி 2 ஷிப்பிங்கை உறுதிப்படுத்தவும் என்பதில் ஒதுக்கப்பட்ட ஃபுல்ஃபில்மெண்ட் சென்டர்களுக்கு உங்கள் புராடக்ட்டுகளை அனுப்புவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

FBA ஷிப்மெண்ட் பாலிசி மற்றும் அந்தப் பாலிசியுடன் உங்கள் ஷிப்மெண்ட்டுகள் இணங்கியிருக்காவிட்டால் நாங்கள் எடுக்க வேண்டிய சாத்தியமுள்ள நடவடிக்கைகளைப் பற்றிய மேலும் தகவலுக்கு, நீக்கப்பட்ட, தவறாக அனுப்பப்பட்ட மற்றும் முழுமையற்ற ஷிப்மெண்ட்டுகள் என்பதற்குச் செல்லவும்.

நான் ஒரு ஷிப்மெண்ட்டை உருவாக்கிய பிறகு, பாக்ஸ்களைச் சேர்க்க அல்லது அகற்ற முடியுமா அல்லது பாக்ஸின் எடை அல்லது பரிமாணங்களைத் திருத்த முடியுமா?

பாக்ஸ்களைச் சேர்க்க அல்லது அகற்ற அல்லது பாக்ஸின் எடை அல்லது பரிமாணங்களைத் திருத்த, நீங்கள் ஷிப்மெண்ட்டை உறுதிப்படுத்திய பிறகு ஷிப்மெண்ட் விவரங்கள் பாக்ஸில் உள்ளடக்கத்தைக் காட்டு அல்லது திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

Nach oben

Benötigen Sie weitere Hilfe?

Besuchen Sie die VerkäuferforenWeitere Informationen finden Sie in Seller Central