நீங்கள் வழங்குகின்ற ஆஃபர்களைப் பற்றி, கஸ்டமர்கள் முதலில் புராடக்ட் விவரப் பக்கத்தில் தான் அறிந்து கொள்வார்கள். பின்வரும் பாலிசிகள் ஒவ்வொரு புராடக்ட் விவரப் பக்கமும் ஒரு தனிப்பட்ட ஐட்டத்தை உள்ளடக்கியிருப்பதை உறுதிசெய்கின்றன. இது கஸ்டமர்களுக்கு ஒரு தெளிவான மற்றும் சீரான வாங்குதல் எக்ஸ்பீரியன்ஸை அளிக்க உதவியாக உள்ளது. பொதுவாக, விதிகள் பின்வருமாறு:
-
சம்பந்தப்பட்ட ஸ்டைல் கைடுகளுக்கு இணங்குதல் மற்றும் HTML, JavaScript அல்லது பிற கோடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.
-
வெறுப்பூட்டுகின்ற அல்லது மனதைப் புண்படுத்துகின்ற விஷயங்கள், இணைப்புகள் அல்லது தொடர்புத் தகவல், சதி விஷயங்கள், ரிவியூக்கள் அல்லது ரிவியூக்களுக்கான வேண்டுகோள்கள் மற்றும் அட்வெர்டைசிங் போன்ற பொருத்தமில்லாத உள்ளடக்கத்தைத் தவிர்த்தல்.
-
உங்கள் புராடக்ட்டுகளைத் துல்லியமாக வகைப்படுத்துதல் மற்றும் விவரித்தல்.
-
லிஸ்டிங்குகள் வேண்டுமென்றே துல்லியமற்றவை, தவறாக வகைப்படுத்தப்பட்டவை என அடையாளம் காணப்பட்டிருந்தால் அல்லது Amazon இன் கேட்டகரி, புராடக்ட் மற்றும் லிஸ்டிங் கட்டுப்பாடுகள் எதையும் தவிர்க்கும் முறையில் ஏமாற்றும் வகையில் விவரிக்கப்பட்டிருந்தால், கஸ்டமர்களின் அக்கவுண்ட்டுகள் செல்லிங் முன்னுரிமைகளை உடனடியாக நிறுத்துவது உட்பட ஆனால் அவை மட்டும் அல்லாமல் திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம்
-
ஏற்கனவே விவரப் பக்கத்தைக் கொண்டிருக்கும் ஒரு புராடக்ட்டுக்கான டூப்ளிகேட் பக்கங்களை உருவாக்குவதைத் தவிர்த்தல்.
-
புதிய புராடக்ட்டுகள் அல்லது வெர்ஷன்களுக்கான புதிய விவரப் பக்கங்களை உருவாக்குதல்.
-
பிரைமரி புராடக்ட் உடன் தொடர்புடைய முறையான “மாறுபாடுகளை” மட்டுமே உருவாக்குங்கள். மேலும் விவரங்களுக்கு, மாறுபாடுகள் பாலிசி என்பதற்குச் செல்லுங்கள்.
லிஸ்டிங்குகளை எழுதுவதற்கான பாலிசிகள்
-
நீங்கள் லிஸ்டிங் செய்யும் புராடக்ட்டுக்குப் பொருத்தமான ஸ்டைல் கைடுக்கு இணங்குங்கள். அனைத்துப் புராடக்ட்டுகளுக்கும் பொருந்துகின்ற பொதுவான விதிமுறைகளை, Amazon Services விரைவுத் தொடக்க ஸ்டைல் வழிகாட்டுதலில் காணலாம். சில வகையான புராடக்ட்டுகள், கூடுதல் ஸ்டைல் கைடுலைன்களைக் கொண்டுள்ளன. குறிப்பிட்ட கேட்டகரிகளுக்கான டெம்ப்ளேட்டுகள் பகுதியில் முழுத் தொகுப்பையும் நீங்கள் காணலாம்.
-
உங்கள் புராடக்ட் விவரப் பக்கங்களில் HTML, JavaScript அல்லது பிற வகையான கோடுகளைப் பயன்படுத்த வேண்டாம். விதிவிலக்காக, நீங்கள் டெஸ்க்ரிப்ஷனில் லைன் பிரேக்குகளைப் (</br>) பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
புராடக்ட் விவரப் பக்கத்தின் தலைப்புகள், டெஸ்க்ரிப்ஷன்கள், புல்லட் பாயிண்டுகள் அல்லது இமேஜ்களில் பின்வருபவை அனுமதிக்கப்படாது:
-
ஆபாசப் படம், ஆபாசமான அல்லது மனதைப் புண்படுத்துகின்ற உள்ளடக்கம்.
-
ஃபோன் நம்பர்கள், முகவரிகள், இமெயில் முகவரிகள் அல்லது வெப்சைட் URLகள்.
-
கிடைக்கும் தன்மை, விலை அல்லது நிலை குறித்த விவரங்கள்.
-
ஆர்டர்களைச் சமர்பிப்பதற்கான பிற வெப்சைட்கள் அல்லது இலவச ஷிப்பிங் போன்ற பிற ஷிப்பிங் ஆஃபர்களின் இணைப்புகள்.
-
புத்தகங்கள், மியூசிக், வீடியோ அல்லது DVD (புத்தகங்கள், மியூசிக், வீடியோ மற்றும் DVD (BMVD)) லிஸ்டிங்குகளின் ஸ்பாய்லர்கள். ஒரு கதையின் சஸ்பென்ஸ் அல்லது ஆச்சரியமான முடிவு சம்பந்தமான முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்துவதும் இதிலடங்கும்.
-
ரிவியூக்கள், மேற்கோள்கள் அல்லது சான்றுகள்.
-
பாசிட்டிவ் கஸ்டமர் ரிவியூக்களுக்கான கோரிக்கைகள்.
-
இமேஜ்கள், ஃபோட்டோக்கள் அல்லது வீடியோக்களில் உள்ள விளம்பரங்கள், புரொமோஷனல் மெட்டீரியல் அல்லது வாட்டர்மார்க்குகள்.
-
சுற்றுப்பயணங்கள், செமினார்கள், விரிவுரைகளின் தேதிகள் போன்ற நேர விவரத்தை வெளிப்படுத்தும் முக்கியத் தகவல்கள்.
-
புராடக்ட் தலைப்புகள், இடைவெளிகள் உட்பட 200 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து கேட்டகரிகளுக்கும் இந்த உச்சபட்ச வரம்பு பொருந்தும். சில கேட்டகரிகளுக்கு, எழுத்துகளின் எண்ணிக்கைக்கான வரம்பு இன்னும் குறைவாகவும் இருக்கலாம். விவரங்களுக்கு, குறிப்பிட்ட கேட்டகரிகளுக்கான டெம்ப்ளேட்டுகளைப் பாருங்கள்.
-
ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்திற்கு மட்டும் பேரெழுத்துகளைப் பயன்படுத்துங்கள். அட்ரிபியூட்டை விளக்கும் மொத்த விளக்கத்திற்கும் பேரெழுத்தைப் பயன்படுத்த வேண்டாம். இது புராடக்ட் தலைப்புகள், புல்லட் பாயிண்ட்டுகள் மற்றும் புராடக்ட் டெஸ்க்ரிப்ஷன்களிற்குப் பொருந்தும். ஒவ்வொரு வார்த்தையின் தொடக்கத்திலும் எமோஜிகள், எமோடிகான்கள் அல்லது சின்னங்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
-
Amazon இல் சேல்ஸ் செய்யப்படும் எந்தவொரு புராடக்ட்டுக்கும், Amazon லிஸ்டிங் ஸ்டாண்டர்டுகளுக்கு இணங்கி செயல்படுங்கள். அவ்வாறு செய்யத் தவறும்போது, நெகட்டிவ் கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸை உருவாக்குகிறது, அதனால் உங்கள் செல்லிங் முன்னுரிமைகள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ அகற்றப்படக்கூடும். அவற்றில் பின்வருவன அடங்கும், ஆனால் இவை மட்டுமே அல்ல:
-
அனைத்துப் புராடக்ட்டுகளும் துல்லியமாக வகைப்படுத்தப்பட வேண்டும். உங்கள் புராடக்ட்டுகளைச் சரியாக வகைப்படுத்துவது பற்றி மேலும் தெரிந்து கொள்ள, புராடக்ட் வகைப்படுத்தல், பிரவுஸ் ட்ரீ வழிகாட்டுதல், மற்றும் ASIN உருவாக்குதல் பாலிசி ஆகிய உதவிப் பக்கங்களைப் பாருங்கள்.
-
புராடக்ட் தலைப்புகள், புராடக்ட் டெஸ்க்ரிப்ஷன்கள் மற்றும் புல்லட் பாயிண்ட்டுகள் ஆகியவை தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும், மேலும் அவை புராடக்ட்டைப் பற்றி கஸ்டமர்கள் எளிதில் புரிந்து கொள்ள உதவும் வகையில் இருக்கவேண்டும்.
-
புராடக்ட் தகவல் துல்லியமாகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும், மேலும் புராடக்ட்டுகளின் குவாலிட்டி அல்லது பண்புகள் குறித்து கஸ்டமர்களைத் தவறாக வழிநடத்தக்கூடாது. அனுமதிக்கக்கூடிய கிளைம்கள் குறித்து மேலும் அறிய, Amazon இன் தடை செய்யப்பட்ட புராடக்ட் கிளைம்கள் பாலிசியை ரிவியூ செய்யுங்கள்.
-
புராடக்ட் இமேஜ்கள் Amazon இமேஜ் ஸ்டாண்டர்டுகளையும் குறிப்பிட்ட கேட்டகரி சார்ந்த இமேஜ் கைடுலைன்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அறிய, புராடக்ட் இமேஜ் தேவைகள் என்பதைப் பாருங்கள்.
-
புராடக்ட்டின் செயல்பாட்டுக்கு அவசியமான எந்தக் கூடுதல் ஐட்டங்களையும் புராடக்ட் விவரப் பக்கம் விவரிக்கிறது என்பதை உறுதிப்படுத்துங்கள்.
விவரப் பக்கங்களைச் சேர்ப்பதற்கான பாலிசிகள்
-
பிற தரப்பினர் மற்றும் தனி நபர்களின் அறிவுசார் IP உரிமைகளை மீறுகின்ற விவரங்களை நீங்கள் சேர்க்க முடியாது. மேலும் விவரங்களுக்கு, செல்லர்களுக்கான அறிவுசார் உடைமை குறித்த உரிமைகள் பக்கத்தைச் சரிபாருங்கள்.
-
புராடக்ட் விவரப் பக்கங்களில் தவறான புராடக்ட் ஐடென்டிஃபிகேஷன் தகவலின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இதில் யுனிவர்சல் புராடக்ட் கோடு (UPC) கோடுகளும், வெளியீட்டுத் தேதிகளும் அடங்கும்.
-
Amazon கேட்டலாகில் முன்பே உள்ள ஒரு புராடக்ட்டுக்கான புராடக்ட் விவரப் பக்கத்தை நீங்கள் உருவாக்கக்கூடாது.
-
ஒரு புராடக்ட்டை கிராஸ் -மெர்ச்சன்டைஸ் அல்லது கிராஸ்-ப்ரோமாட் செய்வதற்காக அல்லது விற்பதற்காக புராடக்ட் விவரப் பக்கங்களை நீங்கள் பயன்படுத்தக் கூடாது.
-
புத்தகங்கள், மியூசிக், வீடியோக்கள் மற்றும் DVD (BMVD) ஆகியவற்றிற்கு, ஒன்றுக்கு மேற்பட்ட புராடக்ட்டுகளை விளம்பரப்படுத்துவதற்காக, நீங்கள் ஒரே ஒரு புராடக்ட் விவரப் பக்கத்தைப் பயன்படுத்தக் கூடாது. புத்தகங்கள், மியூசிக், வீடியோ மற்றும் DVD (BMVD)-மட்டுமே புராடக்ட் தொகுப்புகளை வெளியீட்டாளர் அல்லது உற்பத்தியாளர் விவரங்களைக் கொண்டு வரையறுக்க வேண்டும், மேலும் அந்தத் தொகுப்பில் உள்ள எந்த ஐட்டத்தின் புராடக்ட் ஐடென்டிஃபையரிலிருந்து வேறுபட்ட ஒரே ஒரு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் புக் நம்பர் (ISBN), யுனிவர்சல் புராடக்ட் கோடு (UPC) அல்லது யூரோப்பியன் ஆர்டிகிள் நம்பரை (EAN) கொண்டிருக்க வேண்டும்.
விவரப் பக்கங்களைத் திருத்துவதற்கான பாலிசிகள்
-
முன்னர் பட்டியலிடப்பட்டுள்ள புராடக்ட் பற்றி இன்னும் சிறப்பாகவோ மேலும் துல்லியமாகவோ விவரிப்பதற்காக மட்டுமே நீங்கள் விவரப் பக்கத்தைத் திருத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, அனுமதிக்கப்பட்ட புதுப்பிப்புகளில் கூடுதல் விவரங்கள், தெளிவுபடுத்தல்கள், இலக்கணத் திருத்தங்கள் அல்லது Amazon பாலிசியை மீறும் உள்ளடக்கத்தை அகற்றுதல் ஆகியவை அடங்கும்.
-
Amazon இன் தடை செய்யப்பட்ட புராடக்ட் கிளைம்களில் அடையாளம் காணப்பட்டுள்ளபடி தடை செய்யப்பட்ட கிளைம்களைத் தொடர்ச்சியாகச் சேர்க்க மற்றும் அகற்ற விவரப் பக்கங்களை நீங்கள் புதுப்பிக்கக்கூடாது. இந்தப் பாலிசியைத் தவிர்க்க தடை செய்யப்பட்ட கிளைம்களைத் தொடர்ச்சியாகச் சேர்க்க மற்றும் அகற்ற அடையாளம் காணப்பட்ட செல்லர்கள் செல்லிங் முன்னுரிமைகளை உடனடியாக நிறுத்துவது உட்பட ஆனால் அவை மட்டும் அல்லாமல் திருத்த நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருக்கலாம்.
-
Amazon பாலிசிக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க தடை செய்யப்பட்ட இமேஜ்கள், டிஸ்க்ளைமர்கள் அல்லது உள்ளடக்கத்தைச் சேர்க்க மற்றும் அகற்ற உங்கள் லிஸ்டிங்கைத் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கக்கூடாது. Amazon இல் சேல்ஸ் செய்யப்படும் எந்தவொரு புராடக்ட்டுக்கும் Amazon இன் லிஸ்டிங் ஸ்டாண்டர்டுகளுக்கு இணங்க, செல்லர்கள் தங்கள் புராடக்ட்டுகள் எப்போதும் துல்லியமாக வகைப்படுத்தப்படுவதை, விவரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். கண்டறிவதைத் தவிர்க்கும் முறையில் Amazon இல் புராடக்ட்டுகளை லிஸ்டிங் செய்வது தவிர்க்கும் நடத்தையாகக் கருதப்படுகிறது. பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள் மற்றும் Amazon பாலிசிகளுக்கு நீங்கள் பின்பற்றுவதற்கான செல்லுபடியாகும் ஆதாரத்தை வழங்காத வரை, தவிர்க்கும் நடத்தையானது மீண்டும் நிறுவுவதற்கான பாதையைக் கொண்டிருக்கவில்லை.
-
ஒரு புராடக்ட்டின் புதிய வெர்ஷனுக்கு ஏற்கனவே உள்ள ஒரு லிஸ்டிங்கை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. இதில் நிறம், அளவு, மெட்டீரியல், அம்சங்கள் மற்றும் புராடக்ட்டின் பெயர் ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் அடங்கும். அதற்கு பதிலாக, ஒவ்வொரு புதிய வெர்ஷனுக்கும் ஒரு புதிய புராடக்ட் விவரப் பக்கத்தை உருவாக்குங்கள். எடுத்துக்காட்டாக, ஓர் உற்பத்தியாளர் தனது ஸ்ட்ரீமிங் மீடியா பிளேயரை இரண்டு பட்டன்களுக்குப் பதிலாக நான்கு பட்டன்கள் கொண்ட புதிய ரிமோட் கண்ட்ரோலைச் சேர்ப்பதன் மூலம் புதுப்பிக்கிறார். இது முந்தைய வெர்ஷனில் இருந்து பொருள் ரீதியாக வேறுபட்டது, எனவே, இது ஒரு புதிய ASIN ஆகப் பட்டியலிடப்பட வேண்டியதாகும்.
-
ஒரு புராடக்ட்டை மீண்டும் பிராண்டு செய்ய நீங்கள் தேர்வு செய்தால், சிறிய பிராண்டு பெயர் மாற்றங்களுக்கு Amazon பிராண்டு பெயர் பாலிசி பக்கத்தைப் பார்வையிடுங்கள். எந்தப் பெரிய பிராண்டு பெயர் மாற்றக் கோரிக்கைகளும் மறு பிராண்டிங் எனக் கருதப்படுகின்றன, மேலும் அவை ஆதரிக்கப்படாது. கஸ்டமர் நம்பிக்கையைப் பாதுகாக்க மற்றும் கேட்டலாக் குவாலிட்டியை உறுதிசெய்ய, புதிய புராடக்ட்டுக்கான ஒரு புதிய ASIN ஐ உருவாக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
-
GTIN எக்ஸம்ப்ஷனுடன் உருவாக்கப்பட்ட லிஸ்டிங்குக்கான புராடக்ட் ID ஐத் திருத்தவோ, புதுப்பிக்கவோ சேர்க்கவோ முடியாது. புராடக்ட் ID என்பது திருத்த முடியாத வேல்யூ மற்றும் லிஸ்டிங்கை உருவாக்கியவுடன் அதை மாற்ற முடியாது. GTIN எக்ஸம்ப்ஷனுடன் உருவாக்கப்பட்ட லிஸ்டிங்குக்கான புராடக்ட் ID ஐப் புதுப்பிக்க விரும்பினால், GS1 அங்கீகரிக்கப்பட்ட புராடக்ட் ஐடென்டிஃபையர் உடன் புராடக்ட்டின் புதிய லிஸ்டிங்கை நீங்கள் நீக்கி உருவாக்க வேண்டும்.
Brand Registry பிராண்டட் ASINகளுடன் தொடர்புடைய விவரப் பக்கங்களைத் திருத்துவதற்கான வழிகாட்டுதல்
-
ஒரு பிராண்டின் அங்கீகரிக்கப்பட்ட பல பயனர்கள் ஒரே செல்லிங் பொறுப்பைக் கொண்டிருந்தால், அதே ASIN க்குப் பங்களித்தால், அந்தப் பயனர்கள் ஒரே செல்லிங் பொறுப்பைக் கொண்டிருப்பதால், அந்தப் பொறுப்புகள் அட்ரிபியூட்டில் காட்டப்படுவதற்குச் சமமாக எடைபோடப்படும். Brand Registry போர்ட்டலில் உள்ள செல்லிங் அக்கவுண்ட்டுகளை நிர்வகித்தல் டூல் மூலம் பிராண்டு நிர்வாகிகள் மட்டுமே பிராண்டின் செல்லிங் பொறுப்புகளைப் புதுப்பிக்க முடியும்.
-
ஒரு பிராண்டின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் ஒரே ASIN அட்ரிபியூட்டுக்குப் பங்களித்தால், பங்களிக்கும் தரப்பினரின் சேல்ஸ் வால்யூம், ரீஃபண்ட் ரேட், கஸ்டமர் ஃபீட்பேக், A-to-Z கிளைம்கள் போன்றவற்றின் அடிப்படையில் Amazon இன் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் எந்தத் தகவலைக் காட்ட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் புராடக்ட் விவரப் பக்கத்தில் மாற்றங்களைப் பரிந்துரைப்பது பற்றிய கூடுதல் தகவலைக் கண்டறியுங்கள். ஒரு பிராண்டின் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் எந்தவொரு குழப்பத்தையும் தவிர்க்க, காட்ட மிகவும் பொருத்தமான தகவலைத் தீர்மானிக்க, பிராண்டு நிர்வாகியுடன் ஒத்துழைக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
-
கொடுக்கப்பட்ட ASINக்கான காட்டப்படும் பங்களிப்பைத் தீர்மானிக்க அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு இடையே Amazon மத்தியஸ்தம் செய்யாது அல்லது காட்டப்படும் பங்களிப்பைக் கொண்ட பயனர்கள் பற்றிய தகவலை வெளியிடாது. இதில் செல்லர் பெயர்கள், செல்லர் IDகள், மெர்ச்சண்ட் டோக்கன்கள் மற்றும் இமெயில் முகவரிகள் ஆகியவை அடங்கும், ஆனால் இவை மட்டும் அல்ல.
-
ASIN பிராண்டட் Brand Registry க்கு அங்கீகரிக்கப்பட்ட பயனரால் செய்யப்பட்ட பங்களிப்புகளைச் செல்லிங் பார்ட்னர் சப்போர்ட் குழுவால் திருத்த முடியாது. புராடக்ட் விவரப் பக்கத்தில் தவறான தகவல் இருப்பதாக நீங்கள் நம்பினால், தொடர்புடைய தகவலைச் சமர்ப்பிக்க, அக்கவுண்ட் ஹெல்த் - துஷ்பிரயோகத்தைப் புகாரளியுங்கள் என்பதைப் பார்வையிடுங்கள்.